ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 இறுதி சுற்றில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-க்காக, மாணவர்களின் சிந்தனைகளைத் தேர்வு செய்ய கல்லூரிகள் அளவில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற அணிகள் மட்டுமே, தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
நாடு முழுவதும் சுமாா் 40 ஒருங்கிணைப்பு மையங்களும், அதில் 6 மையங்கள் தமிழகத்தில் அமையும் நிலையில், கோவையில் அமைய உள்ள இரண்டு மையங்களில் ஓன்று ஹிந்துஸ்தான் கல்லூரி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு போட்டிகள் இன்று முதல் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020-யில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று 37 மணி நேர தொடர் மென்பொருள் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி தற்போது உரையாற்றி வருகிறார். இந்நிலையில், கோவையில் இருந்து கலந்துகொண்டு உள்ள தமிழக மாணவிக்கு தமிழில் வணக்கம் தெரிவித்து தனது கலந்துரையாடலை பிரதமர் தொடங்கினார்.
அதில், மழைப் பொழிவை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் குறித்து கோவை மாணவி தெரிவித்தது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், உலகத்தரத்தில் நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அனைவருக்குமான சுகாதார வசதியை ஏற்படுத்த வேண்டும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கிராமப்புறங்களில் மாற்றங்களை உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…