சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் – பிரதமர் மோடி ட்வீட்.!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்களால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, 4 வது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை அறிவித்தார். இந்த திட்டத்தை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பிரதமர் மோடி அறிவித்த, 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார். சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டங்கள் இருந்தது. குறிப்பாக சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டங்களால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் மோடி அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நிதியமைச்சர் அறிவித்த, சிறப்பு பொருளாதார திட்டங்கள் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் என்றும் நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் வகையிலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், இந்த அறிவிப்புகள் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
Today’s announcements by FM @nsitharaman will go a long way in addressing issues faced by businesses, especially MSMEs. The steps announced will boost liquidity, empower the entrepreneurs and strengthen their competitive spirit. #AatmaNirbharBharatAbhiyan
— Narendra Modi (@narendramodi) May 13, 2020