சற்று அதிகரித்த கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 1,335 பேருக்கு பாதிப்பு.. 52 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,672 ஆக குறைவு.
இந்தியாவில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 1,233, நேற்று 1,225 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,335 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,24,440 லிருந்து 4,30,25,775 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 1,918 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,24,89,004 லிருந்து 4,24,90,922 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு 52 பேர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,672 ஆக குறைந்துள்ளது. மேலும், நாட்டில் இதுவரை 181.31 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரேநாளில் 23,57,917 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.