சூரிய ஒளி ஆற்றல் உலகம் முழுவதும் புரட்சி ஏற்பட வேண்டும்!
பிரதமர் நரேந்திர மோடி உலகம் முழுவதும் சூரிய ஒளி ஆற்றல் புரட்சி ஏற்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்முயற்சியில் தொடங்கப்பட்ட சர்வதேச சோலார் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சோலார் தொழில்நுட்பம் அனைவருக்கும் சிறப்பாகவும், மலிவாகவும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியாவில் சூரிய ஒளிக்கான முக்கியத்துவம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேதங்களில் சொல்லப்பட்டு இருப்பதாகவும், தற்போது அவற்றின் கூறுகளை பருவ நிலை மாற்றத்தை சரி செய்வதற்காக பயன்படுத்தலாம் என்றும் மோடி தெரிவித்தார்.
விவசாயம், தூய்மையான சமையல் ஆகியவற்றுக்கு சூரிய ஒளி பயன்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சூரிய ஒளி ஆற்றல் துறையில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர், சூரிய ஒளி ஆற்றலால் கரியமில வாயு வெளியேற்றத்தை பூமியில் குறைக்கலாம் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.