‘தோல் – தோல் தொடுதல் குற்றம் இல்லை’ – 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை..! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

Default Image

தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தனது ஐந்து வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் வித்தியாசமாகநடந்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்டவரின் ஆசிரியர் எச்சரித்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய் தனது மகளிடம் விசாரித்த  போது, அந்தரங்க உறுப்பை தந்தை தொட்டதாக தெரியவந்தது.

இதனையடுத்து, கணவர் மீது மாணவியின் தாய் புகார் அளித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் தந்தை தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து செல்ல விரும்புவதால் தான் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை முன் வைப்பதாக கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் குழந்தைக்கு அரணாகவும் அறங்காவலராக இருக்க வேண்டிய தந்தை பாலியல் வன்கொடுமை செய்வததற்காக அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் 40 வயதான அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாணவியின் தந்தையின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் தோல் தோல் தொடுவது குற்றமில்லை. என்றும் வாதிட்டார். இதனை  நிராகரித்த மும்பை நீதிமன்றம் அவரது தந்தை செய்த இந்த செயல் மிகவும் மோசமான குற்றம் ஆகும். சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதை விட குறைவான தண்டனை வழங்க இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, சிறப்பு நீதிபதி எச்.சி. ஷெண்டே, குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை “வியக்கத்தக்கது” என்று குறிப்பிட்டார், பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தை தனது விரலால் தனது அந்தரங்க உறுப்பைத் தொட்டதாக ஒருபோதும் கூறவில்லை. இதுபோன்ற வாதங்களால் நான் ஆச்சரியப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்