அதிர்ச்சி சம்பவம்..கொரோனா மையமாக மாற்றப்பட்ட கல்லூரியில் ஆண் எலும்புக்கூடு..!
வாரணாசியில் கொரோனா மையமாக மாற்றப்பட்ட கல்லூரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியின் கான்ட் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறைக்குள் ஒரு எலும்புக்கூட்டை கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும், போலீசாரும், தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்தவர் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. தடயவியல் குழு பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.கே.சிங் கூறுகையில், கல்லூரி வளாகத்தின் பின்னால் ஏராளமான புதர்கள் இருப்பதாகவும், அங்கு விளையாட்டு மைதானம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனால், இரண்டு நாட்களாக தூய்மைப் பணிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.
சிலமாணவர்கள் இடைவேளையின் போது கல்லூரியின் பின்புறம் உள்ள வகுப்பறைகளுக்குச் சென்றபோது, ஒரு அறையில் ஒரு எலும்புக்கூடு கிடந்ததைக் கண்டார். அவர்கள் உடனடியாக வந்து எங்களிடம் சொன்னார்கள், அதன் பிறகு கல்லூரி நிர்வாகம் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது. அந்த பழைய அறைகளில் எந்த வகுப்பும் நடக்காது என்று தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் மாவட்ட நிர்வாகத்தால் கல்லூரி ஒரு தங்குமிடமாக மாற்றப்பட்டது. ஏழைகள், சாலைகளில் வசிப்பவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டனர். மனநலம் பாதித்த பலரும் இங்கு வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சில நேரங்களில் ஒருவருக்கொருவர் செங்கல் மற்றும் கற்களை அடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது என சிங் கூறினார்.
இதற்கிடையில், ஆண் எலும்புக்கூட்டின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், தேவைப்பட்டால் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்படும் என்றும் கான்ட் காவல்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தடயவியல் குழுவும், காவல்துறையும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.