போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையேயான துப்பாக்கி சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு!
ஆந்திராவில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தின் திகலமெட்டாவில் கிரேஹவுண்ட்ஸ் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக இன்று அதிகாலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளை போலீசார் கண்டறிந்ததும், போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்பட்ட பகுதியிலிருந்து ஏகே 47 துப்பாக்கி மற்றும் மற்ற பிற துப்பாக்கிகளும் கண்டறியப்பட்டு உள்ளதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியிலிருந்து தப்பி சென்ற மாவோயிஸ்டுகளை போலீசார் ஹெலிகாப்டர் மூலமாக தேடி வருகின்றனராம்.