ஆறு மணி நேர அறுவை சிகிச்சை…! ஒரு வயது குழந்தையின் 3-வது காலை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்…!
ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு கூடுதலாக இருந்த மூன்றாவது காலை நீக்கிய மருத்துவர்கள்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஹைபோவாலின் என்ற ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அக்குழந்தைக்கு சாதாரணமாக உள்ள இரண்டு கால்களை தவிர்த்து, மேலும் ஒரு கூடுதல் கால் பின்புறத்தில் இருந்துள்ளது. இது முக்காலி சிதைவு என்று கூறப்படுகிறது.
இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தாலும், காலில் சக்தி குறைவாக தான் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து இக்குழந்தைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு, 6 மணிநேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த காலை பிரித்து எடுத்துள்ளனர். குழந்தையின் குடும்பத்தார் குறைந்த வருமானம் கொண்டவர்கள். எனவே, இக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று உதவிசெய்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு சுமார் 1.25 லட்சம் செலவாகி உள்ளது.
இந்த அறுவை சிகிச்சையை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.கே.கெளசல், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது யமின், குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.ஜே.சிங் மற்றும் மூத்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ரவீந்திரா ஆகியோர் மேற்கொண்டனர்.