ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் – சுகாதார அமைச்சகம்.!

Default Image

ஜிம் மற்றும் யோகா நிறுவனங்களில் நபர்களுக்கு இடையில் ஆறு அடி தூரம் கட்டாயம் இருக்க வேண்டுமென சுகாதார துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

கடந்த திங்களன்று, சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களில் பயிற்சி செய்யும் போது தனிநபர்கள் இடையில் குறைந்தபட்சம் ஆறு அடி தூரமாவது இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் சுகாதார துறை வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, கட்டுப்பாட்டு மண்டலங்களின் வெளியே உள்ள பகுதிகளில் மட்டுமே  ஆகஸ்ட் 5 முதல்  யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 65 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை.

ஒரு நபருக்கு குறைந்தது நான்கு மீட்டர் சதுர அடி தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் அதிலுள்ள சாதனங்களை ஆறு அடி தூரம் இடைவெளியில் வைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயிலில் சானிடைசர் மற்றும் வெப்ப ஸ்கிரீனிங் ஏற்பாடுகள் இருப்பது கட்டாயம் என்றும், அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் எல்லா யோகா நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் ஆரோக்யாசெட் பயன்பாட்டை பயன்படுத்தலாம். மேலும் வளாகத்திற்கு வெளியே காலணிகளை ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி இடங்களில் வைக்கப்பட வேண்டும்.

உறுப்பினர்கள் மற்றும் மற்ற அனைவரது செக்-இன் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் 95%க்கும் குறைவான ஆக்ஸிஜன் செறிவு உள்ளவர்களை உடற்பயிற்சி செய்ய அனுமதிக்க கூடாது. அவ்வாறு உள்ள நபர்களை மத்திய / மாநில ஹெல்ப்லைன் / ஆம்புலன்ஸ் ஆகியவற்றிற்கு அழைத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்