கேரளாவில் திருக்குறளை பரப்பிய சிவானந்தர் காலமானார்…!

கேரளா மாநிலத்தில் திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பரப்பிய சிவானந்தர் காலமானார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரவம் எனும் ஊரில் 1946 ஆம் ஆண்டு கொச்சன் – பொலியாள் தம்பதிக்கு 12-வது மகனாக பிறந்தவர் தான் சிவானந்தர். இவர் தனது சிறு வயதில் இருந்தே திருக்குறள் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். இதனையடுத்து மக்களிடம் திருக்குறளின் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவதை தனது முழுநேரப் பணியாக செய்து வந்துள்ளார். இவரது துணைவியார் சரஸ்வதி அம்மையாரும் சிவானந்தர் உடன் இணைந்து திருக்குறள் சிந்தனைகளை மக்களிடம் பரப்புவதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன்பின் இவர்கள் இருவரும் இணைந்து பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானமடம் எனும் அமைப்பை நிறுவி உள்ளனர். உலகம் போற்றும் தமிழராக கொண்டாடப்படும் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை கேரளாவில் மலையாள மொழி பேசக்கூடிய மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் தான் கேரள மாநிலத்தவர் சிவானந்தர். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு சிவானந்தர் காலமாகியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025