இன்று கொல்லம் மாவட்டத்தில் உள்ள நிலமேலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்றார். அப்போது நிலமேலில் பகுதியில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை ஓரமாக 50-க்கும் மேற்பட்டோர் கொண்ட மாணவர் கூட்டமைப்பினர் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
நிலமேலில் தனது எதிராக போராட்டம் நடத்தியவர்கள் நோக்கி சென்று ஆளுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் அருகிலுள்ள டீக்கடையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். காவல்துறையினரால் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் தனது வாகனத்தில் மீண்டும் செல்ல மறுத்துவிட்டார். போராட்டக்காரர்கள் மீது உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பெங்களூருவில் தொடங்கிய பாஜக மாநில செயற்குழு கூட்டம் ..!
மேலும், கறுப்புக்கொடி போராட்டம் பற்றி தகவல் கிடைத்தும் போராட்டக்காரர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும் . போராட்டக்காரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இருந்தனர் என ஆளுநர் தெரிவித்தார். தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசாரே போராட்டம் நடத்துபவர்களுக்கு உதவுகிறார்கள் என்றார். முதலமைச்சராக இருந்தால் இப்படி பாதுகாப்பு அளிப்பீர்களா..? என்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரளா அரசுக்கும் இடையே மோதல் போக்குதொடர்ந்து வருகிறது. கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களில் அவர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் ஆளுநருக்கும், அரசுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் தொடங்கிய சபை கூட்டுத்தொடரில் கேரளா ஆளுநர் 136 பக்கங்கள் கொண்ட கொள்கை அறிக்கையின் 135 பக்கங்களை ஆளுநர் புறக்கணித்து கடைசி பக்கத்தை மட்டும் வெறும் 1.17 நிமிடத்தில் படித்து தனது உரையை நிறைவு செய்தார். ஆளுநரின் இந்த செயலால் கேரளா சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…