முடா வழக்கு : சித்தராமையா விசாரிக்கலாம்.., உயர்நீதிமன்றம் அனுமதி.!
கர்நாடகா முடா முறைகேடு வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்கலாம் என கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு : கர்நாடாகா மாநிலம் மைசூருவில் , மைசூரு நகர் மேம்பாட்டு ஆணையம் எனும் முடா (MUDA) எனும் திட்டத்தின் ஈழ கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் அரசுக்கு சுமார் பல கோடிகள் இழப்பீடு ஏற்பட்டதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்து இருந்தார்.
இந்த வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்தார். ஆளுநர் அளித்த உத்தரவின் பெயரில் விசாரணைக்குழு தங்கள் விசாரணையை தொடர்ந்தது.
விசாரணையை தொடர ஆளுநர் அளித்த உத்தரவுக்கு எதிராக பெங்களூரு உயர்நீதிமன்றத்தை கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா நாடினர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி நாகபிரசன்னா தலைமையில் நடைபெற்றது.இதன் வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், முடா முறைகேடு வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனக் கூறி சித்தராமையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து ஆளுநர் அளித்த உத்தரவின் பெயரில் விசாரனைக் குழுவினர் கர்நாடாகா முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தற்போது எந்த தடையுமில்லை எனக் கூறப்படுகிறது.