அரசியலில் களமிறங்கும் நடிகர் சோனு சூட்டின் சகோதரி ….!
நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட் அடுத்தாண்டு பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் பொழுது நடிகர் சோனு சூட் அவர்கள் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதன் மூலமாக பெரிதும் பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக நடிகர் சோனு சூட் அவர்கள் டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கான திட்டம் ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டார்.
அரசியல்வாதிகள் மற்றும் சில கட்சிகளுடன் நெருக்கமாக இருந்தாலும், தனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அண்மையில் சோனு சூட் தெரிவித்திருந்தார். தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது சகோதரி மாளவிகா சூட் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். ஆனால் எந்த கட்சியை சார்ந்து நிற்க போகிறார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.