பாடகர் எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து குணமடைய வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன்
பாடகர் எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து குணமடைய பிராத்தனை செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள பாடகர் எஸ். பி. பிக்கு உயிர்காக்கும் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் மூலம் அவரது உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.எனவே பல்வேறு தரப்பினரும் எஸ். பி. பி குணமடைய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், பாடகர் எஸ்.பி.பி கொரோனாவில் இருந்து குணமடைய பிராத்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
I pray for the quick recovery & good health of our most admired playback singer Sh SP Balasubramaniam ji. He created a heart-rendering video to boost the morale of lakhs of #CoronaWarriors in the country at a time when they were facing acute stigma in society#GetWellSoonSPBSIR https://t.co/czrSWqjeH2
— Dr Harsh Vardhan (@drharshvardhan) August 20, 2020