பண்டிகைக்கால பட்டாசு விற்பனைக்கு தடை விதித்த சிக்கிம் அரசாங்கம்!
பண்டிகைக்கால பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து சிக்கிம் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலும் சொல்லவே தேவையில்லை, பண்டிகைக்கும் பட்டாசுக்கும் பஞ்சமே இருக்காது. இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் பட்டாசுகளை இப்பொழுதே வாங்க மற்றும் விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தாண்டு கொரோனா பெருந்தொற்றால் மிகவும் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான், மேற்கு வணக்கம் ஆகிய மாநிலங்களில் அரசு பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மேலும், டெல்லியில் இயற்கையை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்றாக சிக்கிம் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிக்கிம் மாநிலத்திலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு சிலர் வரவேற்பு தெரிவித்திருந்தால் பட்டாசு தொழிலை நம்பியுள்ளவர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.