சிக்கிமில் திடீர் வெள்ளம்: பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு…100 பேர் மாயம்!

Sikkim flood

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் கடந்த 4 ஆம் தேதி அதிகாலையில் திடீர் மேகவெடிப்பு காரணமாக பலத்த கனமழை பெய்தது. இதனால், தீஸ்தா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிக்கித் தவிக்கும் நிலையில், பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மேற்கு வங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மற்றும் கூச் பெஹார் மாவட்டங்களில் 49 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போய்யுள்ளனர். இதற்கிடையில், இந்த வெள்ளத்தில் காணாமல் போன இந்திய ராணுவ வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காணாமல் போன 23 பேரில் இதுவரை ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார், மேலும் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு சிக்கிமில் உள்ள லாச்சென், லாச்சுங், தாங்கு மற்றும் சுங்தாங் ஆகிய இடங்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 1,700 சுற்றுலாப் பயணிகளுக்கு ராணுவ வீரர்கள் உணவு, மருத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
raj thackeray
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB