கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
இன்று கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாஜக அபார வெற்றிபெற்றது.காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த 15 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் கர்நாடக சட்டப்பேரவை தொகுதிகள் 222 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு பெரும்பான்மை நிரூபிக்க 112 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்க வேண்டும் .இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலையில் பாஜக 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இதனால் எடியூரப்பா அரசுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…