தமிழகத்தை பின்பற்றி அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும்! முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்து!
கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தங்களுக்கு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தெரிவித்தனர். இந்த ராஜினாமா குறித்து அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் வந்து விளக்கம் தரும் வரை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரம் ஆளுநர் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டது. இன்று நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கப்படும் என் தெரிகிறது.
இது குறித்து முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினருமான சித்தராமையா கூறுகையில், ‘ தமிழ்நாடு அரசை போல அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அந்த தகுதி நீக்க உத்தரவை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.’ என தெரிவித்தார்.