கர்நாடக முதலமைச்சர், துணை முதலமைச்சராக பதவியேற்றனர் சித்தராமையா, டிகே சிவகுமார்!
பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் கர்நாடகாவின் 39-வது முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா.
கர்நாடக மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் சித்தராமையா. இதனைத்தொடர்ந்து கர்நாடகாவின் துணை முதலமைச்சராக பதவியேற்றார் டி.கே.சிவக்குமார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகிய இருவருக்கும் மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவாகுமாரை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று வருகின்றனர். அதன்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக அரசில் கேபினட் அமைச்சர்களாக ஜி பரமேஸ்வரா, கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்பி பாட்டீல், சதீஷ் ஜார்கோலி, கார்கே மகன் பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி மற்றும் பிஇசட் ஜமீர் அகமது கான் ஆகியோர் பதவியேற்றனர்.
பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் பதவி ஏற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவரை ராகுல் காந்தி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.