பிரதமர் மோடி பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க தயாரா.?! முன்னாள் முதல்வர் சித்தராமையா சவால்.!
பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை நேரடியாக அழைத்து சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா.? என கர்நாடகா முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான் சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடந்த மாதம் 30ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினர். யாத்திரையின் 12வது நாளில் கர்நாடாக வந்தடைந்தார் ராகுல் காந்தி. அவருக்கு போட்டியாக கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பாஜகவினர் பலர் ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து கர்நாடகா முழுவதும் ஜன்சங்கல்ப் யாத்திரையை தொடங்கினர்.
அப்போது அந்த தொடக்க கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, ‘ உலகம் போற்றும் தலைவராக மோடி இருக்கிறார். அவரை அரசியலில் சிறு குழந்தையாக இருக்கும் ராகுல் காந்தி விமர்சிக்கிறார்.’ என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த விமர்சனம் குறித்து, முன்னாள் முதல்வரும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் குறிப்பிடுகையில், ‘ பிரதமர் நரேந்திர மோடி பத்திரிக்கையாளர்களை நேரடியாக அழைத்து சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா.? ‘ என சவால் எழுப்பினார்.
ஜன்சங்கல்ப் யாத்திரை எனும் பெயரில் கார் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் செல்லாமல் சாலையில் இறங்கி கீழே விழாமல் உங்களால் ஒரு 4 கிலோமீட்டர் நடந்து செல்ல முடியுமா ?’ என்றும், முதலவர் பசவராஜ் பொம்மைக்கு டிவிட்டர் மூலம் சித்தராமையா சவால் விடுத்தார்.
மேலும் அந்த டிவீட்டில், ‘ முதல்வர் பசவராஜ் பொம்மை கட்சி தலைமைக்கு தவணை செலுத்தி வருவதால் தான் தனது முதல்வர் பதவியில் பாதுகாப்பாக இருப்பதாக.’ சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
Former CM @BSYBJP & the present CM @BSBommai is on a Janasankalpa Yatra. I want to challenge them on 2 things..
1. Get down of the car & walk for 4Km without falling down
2. Do a 5 minute speech without taking the name of Siddaramaiah#ಬಡಾಯಿಬೊಮ್ಮಾಯಿ
— Siddaramaiah (@siddaramaiah) October 12, 2022