இன்று ஒரே நாளில் கேரளாவில் 111 பேருக்கு கொரோனா.!
இன்று ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,699 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 111 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,699 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது 973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உள்ளது.
மேலும் இன்று 3597 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 79074 தனிப்பட்ட மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில், 74769 மாதிரிகள் எதிர்மறையாக இருந்தன. முன்னுரிமை குழுவின் 19650 மாதிரிகள் இதுவரை சேகரிக்கப்பட்டன, அவற்றில் 18049 எதிர்மறையானவை. இதுவரை மொத்தம் 104045 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன என்று தெரிவித்துள்ளார். வீட்டு கண்காணிப்பில் 1,77,106 பேர் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.