கேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு!
கேரளாவில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது சில தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், பல துறைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் ஜூன் 9 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும், சபரிமலையில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 பேர் வரை மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, கேரளாவில் உள்ள மால்கள், உணவகங்களும் வரும் 9 ஆம் தேதி முதல் திறக்கப்படும் எனவும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு உத்தரவிட்டார்.