ஜம்மு-காஷ்மீரில் வழிபாட்டுத் தலங்கள் ஆகஸ்ட் -16 முதல் மீண்டும் திறப்பு.!

Default Image

ஜம்மு-காஷ்மீரில்  உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மீண்டும் திறக்க அனுமதி.

ஆகஸ்ட்- 16, முதல் ஜம்மு-காஷ்மீரில் அனைத்து மத இடங்களும் வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படவுள்ளது. மத ஊர்வலங்கள் மற்றும் பெரிய மதக் கூட்டங்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன, முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்க தனி எஸ்ஓபி விரைவில் வெளியீடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனைத்து அத்தியாவசியமற்ற செயல்களுக்கும் தனிநபர்களின் நடமாட்டம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தடைசெய்யப்படும். இதற்காக, மாவட்ட சிஆர்பிசி பிரிவு 144 இன் கீழ்  தடை உத்தரவுகளை பிறப்பிப்பார்கள்.

பண்டிபோராவைத் தவிர காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களையும் நிர்வாகம் ‘சிவப்பு மண்டலங்கள்’ என்று அறிவித்துள்ளது. தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்கள் பச்சை மண்டலங்களில் வைக்கப்பட்டுள்ளன ஏன்னென்றால் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று எதுவும் இல்லை. இதற்கிடையில், ஜம்மு பகுதி மற்றும் பாண்டிபோரா மாவட்டத்தின் மீதமுள்ள ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்