சிகரெட் வாங்கி தர சொல்லி கேட்டதுக்கு கத்தி குத்தா ?வழக்கு அமல்!

- மும்பையில் உள்ள தானே பகுதியில் சிகரெட் வாங்கி தர சொன்னதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய நபர்.
- தற்போது இந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை பெருநகரின் வடகிழக்கே உள்ள புறநகர்ப் பதியில் உள்ள ஒரு நகரம் தானே ஆகும்.இங்கு கோட்பந்தர் ரோடு மான்பாடாவை சேர்ந்தவர் கிருஷ்ணா ஆவார்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதி அப்பகுதியை சேர்ந்த சவான் சிங் என்பவரிடம் சிகரெட் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சவான் சிங் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணாவின் வயிறு மற்றும் தொடையில் குத்தியுள்ளார்.
இதனால் பலத்த காயமடைந்த கிருஷ்ணாவை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்துள்ளார்.
இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சவான் சிங்கை கைது செய்துள்ளனர்.பின்னர் கிருஷ்ணா தானே கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதில் வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025