2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டையே உலுக்கிய மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் வன்கொடுமை செய்யப்பட்டு டெல்லி சாலையில் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி மருத்துவ தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த கோர சம்பவத்தை நிகழ்த்திய ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.
அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பின் குற்றவாளிகள் 4-பேருக்கும் தூக்கு தண்டனையை காலதாமதம்படுத்த ஒருவர் ஒருவராக சீராய்வு மனுகள் , கருணை மனு ஆகியவை தாக்கல் செய்தனர்.
இதனால் மூன்று முறை தூக்கு தண்டனை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 05.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு சற்று முன் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…