சற்று முன்…இந்திய பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் சந்திப்பு
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது இரண்டு நாள் பயணத்தின் தொடக்கமாக வியாழக்கிழமை(நேற்று) குஜராத் வந்தடைந்தபோது அவருக்கு குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அவர் சென்ற நிலையில்,அங்கிருந்தவர்கள் உதவியுடன் கைத்தறி இயந்திரத்தை இயக்கி பார்த்தார்.அதன்பின்னர்,குஜாரத்தில் உள்ள தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகள் தொடர்பாக போரிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து,பஞ்ச்மஹால் பகுதியில் உள்ள பிரிட்டனை சேர்ந்த ஜே.சி.பி உற்பத்தி தொழிற்சாலையை போரிஸ் ஜான்சன் பார்வையிட்டார். அதன்பின்னர்,அகமதாபாத்தில் உள்ள அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியை போரிஸ் சந்தித்தார்.
இந்நிலையில்,இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்து பிரதமர் சந்தித்து உள்ளார்.ராஷ்டிரபதி பவனில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும், போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு விதமாக அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்மள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு,பொருளாதார கூட்டாண்மை மற்றும் பல்வேறு முக்கிய தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
#WATCH | Prime Minister Narendra Modi receives UK PM Boris Johnson at Rashtrapati Bhavan pic.twitter.com/IpbQMKAWPb
— ANI (@ANI) April 22, 2022