பெங்களூரில் கடைகள் அடித்து உடைப்பு! பலத்த போலீஸ் பாதுகாப்பு…

Bengaluru English nameplates

பெங்களூரு நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளை கன்னடத்தில் தான் இருக்க வேண்டும் என்று சமீபத்தில் பெங்களூரு மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைத்துள்ள கடைகளை கன்னட அமைப்பினர் அடித்து உடைத்து வருகின்றனர். இதனால், பெங்களூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத கடை மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தி, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்கள் சிலரை கைது செய்தனர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தற்காலிக குழு நியமனம்..!

போலீசார் கைது செய்து வருவதால், பெங்களூரு நகரம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பெங்களூருவில் 1,400 கிமீ தமனி மற்றும் துணை தமனி சாலைகள் உள்ளன.  சைகை பலகைகளில் கன்னட மொழி பயன்பாடு தொடர்பான விதிகளை கடைபிடித்த கடைகளை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கர்நாடக ரக்‌ஷனா வேதிகே ஆர்வலர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்