பரபரப்பு..! நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு.! பெண் உட்பட வழக்கறிஞர் காயம்…
டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் காயமடைந்தனர்.
டெல்லி: சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட வழக்கறிஞர் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு பெண் மற்றும் ஒரு வழக்கறிஞர் காயமடைந்துள்ளனர். திடீரென, அந்த வழக்கறிஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த, அம்மாவட்ட தெற்கு காவல் நிலைய டிசிபி சந்தன் சவுத்ரி கூறுகையில், சாகேத் நீதிமன்ற வளாகத்தில் காலை 10:30 மணி அளவில், இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டில், குண்டடிப்பட்ட ஒரு பெண் மற்றும் வழக்கறிஞர் ஒருவர் தோட்டாக் காயங்களுடன் உயிர் தப்பியதாக தெரிவித்தார்.
மேலும், அவர்கள் இருவரும் சாகேத் மாவட்டத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இப்போது, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், எந்தவித ஆபத்தும் இல்லை என தகவல் தெரிவித்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
In a major security breach, an assailant opened fire inside #Delhi‘s #Saket court complex, injuring two people.
“Two persons, a woman and a lawyer, have suffered bullet injuries in the firing incident,” Chandan Chowdhary, DCP South, told HT, confirming the shooting. pic.twitter.com/KsIrMtUE2j
— All that trending (@allthatrending) April 21, 2023
தற்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காமேஷ்வர் பிரசாத் சிங் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வழக்கறிஞர் என்றும், ஆனால் அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில், அவரது பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.