தேசத்துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் பொதுக் கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் தலைநகர் டெல்லியில் தீவிரமைடைந்து உள்ளது.பாஜக,காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தான் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் பிரச்சார கூட்டத்தில் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அனுராக் தாகூர் பேசுகையில், நாட்டின் துரோகிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று பேசியுள்ளார்.மத்திய அமைச்சார் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தொடர்பாக , காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…