தேஜஷ்வி யாதவ் மீது அடுத்தடுத்து செருப்பு வீச்சு..பீகாரில் பரபரப்பு
பீகாரில்நடந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஷ்வி யாதவ் மீது மர்மநபர் செருப்புகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹகத்பந்தனின் (பெரும் கூட்டணி) முக்கியமான தலைவராக உள்ளார்.
மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவராகவும் தேஜஷ்வி யாதவ் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இவருடன் கூடிய மஹாகூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் பிற இடது கட்சிகள் இடம்பெற்றுள்ளது.மேலும் தேஜஷ்வி யாதவ் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதீஷ் குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார்
பீகாரில் அவுரங்காபாத்தில் நடந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஷ்வி யாதவ் மீது மர்மநபர்கள் செருப்புகளை வீசிய வீடியோ வைரலாகி வருகிறது
பேரணி முடிந்து மேடையில் உரையாற்ற சென்ற தேஜஷ்வி யாதவ் இருக்கையில் அமர்ந்து தனது கட்சி தொண்டர்களிடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒரு செருப்பை யாரோ எறிந்து அவரைத் தாக்க முயன்றனர்.
#WATCH Bihar: A pair of slippers hurled at RJD leader Tejashwi Yadav at a public rally in Aurangabad, today. pic.twitter.com/7G5ZIH8Kku— ANI (@ANI) October 20, 2020
ஆனால் அது தொண்டர் மேல் பட்டது அடுத்த சில விநாடி கழித்து, மற்றொரு செருப்பு அவரை நோக்கி வீசப்பட்டது.இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.