மேற்குவங்கத்தில் பெண் ஆசிரியர்கள் விஷம் குடித்து மயங்கி விழும் அதிர்ச்சியான காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
செவ்வாய்க்கிழமை அன்று உப்பு ஏரி பகுதியில் உள்ள பிகாஷ் பவனில் இருக்கும் மாநில அரசின் கல்வித் துறை தலைமையகத்திற்கு வெளியே ஐந்து பெண் ஆசிரியர்கள் விஷம் குடித்துள்ளனர். அப்போது விஷம் அருந்திய ஆசிரியர்களில் ஒருவரின் வாயில் இருந்து நுரை வரத்தொடங்கியுள்ளது. அந்நேரத்தில் அந்த ஆசிரியர் தெரிவித்ததாவது, மாதம் ரூ.10,000 மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், இடமாற்றங்களுடன் இவ்வளவு குறைந்த தொகையில் பிழைப்பது கடினம் என்றும் கூறியுள்ளார்.
ஆசிரியர்கள் பூச்சிக்கொல்லி அருந்திய காரணத்தினால் வளாகத்தினுள் நுழையாமல் பிதானந்தர் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை NRS மற்றும் RG மருத்துவமனைகளில் அனுமதித்து விஷத்தை அகற்றியுள்ளனர். மேலும், அன்று மாலை அவர்கள் உடல் சீராகிவிட்டதாக அறிவித்துள்ளனர், இருந்தபோதிலும் இரவு வரை அந்த ஆசிரியர்களை கண்காணிப்பில் வைத்து உள்ளனர்.
விஷம் குடித்த அந்த ஐந்து ஆசிரியர்களின் பெயர் அனிமா நாத், சோபி தாஸ், சிக்கா தாஸ், புதுல் மண்டல், ஜோஷ்வா துடு மற்றும் மந்திர சர்தார். அவர்கள் சிக்ஷக் ஒக்யோ முக்தா மாஞ்சாவின் உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் இவர்கள் அவர்களின் வீடுகளில் இருந்து தொலைதூர இடங்களுக்கு வந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த 5 ஆசிரியர்களின் விஷம் அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…