அதிர்ச்சி வீடியோ: நிலப்பிரச்சனை காரணமாக 2 பெண்களை உயிருடன் புதைத்த கொடூரம்!
மத்திய பிரதேசம்: சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும் மண்களை கொட்டி இரு பெண்களை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் இரண்டு பெண்கள் அப்பகுதியில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, லாரியில் இருந்து மண் சரளை கொட்டி அவர்கள் உயிருடன் புதைத்துள்ளனர். இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த இரு பெண்களும் தனியார் நிலத்தில் வலுக்கட்டாயமாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். மங்காவா காவல் நிலையத்திற்குட்பட்ட ஹினோட்டா ஜோரோட் கிராமத்தில் தனியார் நிலத்தில் சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மம்தா பாண்டே மற்றும் ஆஷா பாண்டே ஆகிய பெண்கள் கழுத்து வரை மண் சரளால் புதைக்கப்பட்டனர்.
In India, Madhya Pradesh’s Rewa district, two women were buried alive by goons. These women were protesting against the construction of a road on their private land.
where is government ????#MadhyaPradesh #Trending #harassment #stopwomenatrocities pic.twitter.com/1Nd8AjlAku— Anish (@anish_fit) July 22, 2024
விசாரணையில் நிலம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாக தகராறு நடந்து வந்தது தெரிய வந்துள்ளது. கங்கேவ் காவல்நிலையத்தில் குப்பைத் தொட்டி உரிமையாளர் உட்பட தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின், மம்தா மற்றும் ஆஷா பாண்டேவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.