தெலுங்கானா : கஜ்வெல் நகரில் அதிக வேகமாக பைக்கில் சென்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரஜ்னாபூரைச் சேர்ந்த காட்டு ஷ்ரவன்குமார் யாதவ் (18), தனது நண்பர் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த புசுலூரி திரிநாத் (18) என்பவருடன் சிவாஜி சிலையிலிருந்து கஜ்வெல் விவேகானந்தர் சதுக்கம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுகொண்டு இருந்தார்கள்.
திரிநாத் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ஷ்ரவன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.அப்போது, ரோட்டை கடந்த கனகயா என்ற நபர் பைக் வேகமாக வருவதை பார்க்காமல் சென்று கொண்டு இருந்தார். பின், அவர் மீது திரிநாத், ஷ்ரவன்குமார் யாதவ் இருவரும் வேகமாக வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கனகய்யா, திரிநாத் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.
பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஷ்ரவன் குமார் பறந்து டிவைடரில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கஜ்வேல் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷ்ரவன்குமாரின் தந்தை காட்டு ரமேஷ் புகாரின்படி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கஜ்வேல் இன்ஸ்பெக்டர் பி.சைதா தெரிவித்தார். விபத்து நடந்த அந்த காட்சி தெரிவில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது. அந்த அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…