அதிர்ச்சி…முதியவரை கடித்து கொன்ற தெருநாய்கள்…பதைபதைக்க வைக்கும் வீடியோ.!!

Default Image

அலிகார் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் மொத்தமாக கடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

உத்தரபிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (ஏஎம்யு) இன்று  காலை தெருநாய்கள் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூங்கா ஒன்றில் சுற்றித் திரிந்த முதியவர் ஒருவரை நாய்கள் கூட்டமொன்று தாக்கி அவரை கொன்றது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், நாய்கள் கூட்டத்தால் தாக்கப்பட்டு, நாய்கள் பூங்கா முழுவதும் அவரை  இழுத்துச் சென்றதைக் காண முடிந்தது.

இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இறந்தவர் 65 வயதான டாக்டர் சப்தர் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலை 7.30 மணியளவில் பூங்காவில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தெருநாய்கள் ஒருவரை கடித்த கொன்ற சம்பவம் தற்போது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்