குஜராத் : ஓடும் பள்ளி வேனில் இருந்து இரண்டு பள்ளி மாணவிகள், திடீரென கீழே விழும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மஞ்சல்பூரில் இந்த திகிலூட்டும் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், பள்ளி மாணவிகளை ஏற்றி செல்லும் ஒரு வெள்ளை நிற ஆம்னி வேனில், ஒரு சிறிய தெரு வழியாக செல்வதைக் காட்டுகிறது. வேகமாக செல்லும் அந்த ஆம்னி வேனின் பின் வழி டோர் எதிர்பாராத விதமாக ஓபன் ஆகி இரு மாணவிகள் நடு ரோட்டில் விழுந்து, கை மற்றும் கால்களில் அடி விழுந்திடவும் கதற தொடங்கினர்.
பின்னர், மாணவிகள் கூச்சிலிட தொடங்கியதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவிகளை தூக்கி விடவும், சிலர் அந்த வேனின் ஓட்டுநரை திட்டவும் செய்கிறார்கள். மனதை பதறவைக்கும் இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை எழுப்பியது. பல ஊடக பயனர்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
ஓட்டுநரின் கவனக்குறைவால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் வேன் கதவை சரியாக மூடாததால், மாணவிகள் வெளியே விழுந்தனர். இதனால், மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…