ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!
பஹல்காம் தாக்குதலின் கொடூரமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல் 6 பயங்கரவாதிகள் அங்கு சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர். ராணுவ வீரர்கள் போல் வேடமிட்ட பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கொன்றனர். இறந்தவர்களில் பல வெளிநாட்டினரும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துவிட்டது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சைஃபுல்லா கசூரி என அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும், ஈடுபட்ட 5 பேரில் மூன்று பயங்கரவாதிகள் (ஆசிஃப் ஃபவுஜி, சுலேமான் ஷா, அபு தல்ஹா) அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதனையடுத்து, மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), ஜம்மு – காஷ்மீர் காவல்துறை, மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) இணைந்து பைசரன் பகுதியைச் சுற்றி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பயங்கரவாதிகள் பிர் பஞ்சால் மலைத்தொடரின் மேல் பகுதிகளுக்கு தப்பியதாக நம்பப்படுகிறது. விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சம்பவ நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது.
வீடியோவில் ” பயங்கரவாதிகள் சிலர் நுழைந்து மக்களை தாக்குவதை காண முடிந்தது. பலரும் இயற்கையை ரசித்துக்கொண்டு இருக்கும் நிலையில் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள் மக்களை துப்பாக்கியால் சுடுகிறார்கள். இந்த வீடியோ இப்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் இதயம் கொதிக்கிறது என கூறி வருகிறார்கள்.
पहलगाम में मासूम हिंदुओं को घेरकर दरिंदों ने गोलियों से छलनी कर दिया।
ये कोई आतंकी हमला नहीं, सीधे-सीधे चुनकर किया गया नरसंहार है।
निहत्थे, लाचार पर्यटक… और हैवानों के हाथ में बंदूक।
चुप रहने वालों की चुप्पी भी अब खून सरीखी लगती है। #PahalgamTerroristAttack… pic.twitter.com/HW9dyqa6Oa— माही 🚩|| सनातन धर्म सर्वोपरि ||🚩 🙏 राम राम🙏 (@Maahibahubali) April 24, 2025