மற்றொரு பயணியும் குடிபோதையில், சிறுநீர் கழித்துள்ள அதிர்ச்சி சம்பவம்.!
ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியின் போர்வையில், மற்றொரு நபர் குடிபோதையில் சிறுநீர் கழித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
ஏர் இந்தியாவின் பாரிஸ்-டெல்லி விமானத்தில், குடிபோதையில் இருந்த ஒரு ஆண் பயணி, பெண் பயணியின் போர்வையில் சிறுநீர் கழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் டிச-6 அன்று நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து பயணி எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதனால் அவர் மீது தண்டனை நடவடிக்கைக்கான அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.சமீபத்தில் வெளியான (நவ-26இல் நடைபெற்ற) இதே போன்று குடிபோதையில் இருந்த வணிக வகுப்பில் பயணித்த ஆண் பயணி ஒருவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்தின் சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தின் பைலட், இது குறித்து விமான நிலையத்தில் உள்ள ஏர் டிராஃபிக் கண்ட்ரோலுக்கு (ஏடிசி) தகவல் தெரிவித்தார், அதைத் தொடர்ந்து அந்த ஆண் பயணி கைது செய்யப்பட்டார்.