அதிர்ச்சியூட்டும் சம்பவம் … காவல் அதிகாரி என கூறி 19 வயது சிறுமி மருத்துவமனையில் வன்கொடுமை..!
புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் 19 வயது நோயாளியை 47 வயதான அரசு மருத்துவமனை பாதுகாப்பு காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு நடந்தது. அந்த சிறுமி முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்த பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார். எஃப்.ஐ.ஆரில், பாதுகாப்புக் காவலர் தன்னை காவல்துறை அதிகாரியாக கூறி தனது அறைக்குள் நுழைந்ததாக அந்த சிறுமி தெரிவித்தார்.
பின்னர், தனது சிகிச்சை குறித்து அவளிடம் கேட்கும் சாக்குப்போக்கில் அருகிலுள்ள வார்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்போது தன்னைத் துன்புறுத்தியதாகவும் சிறுமி கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனை ஊழியர்களை எச்சரித்ததோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலியல் துன்புறுத்தலுக்காக பாதுகாப்பு காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவல்துறையினர் கடந்த புதன்கிழமை எப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக பாதுகாப்புக் காவலரை கைது செய்தனர். உதவி ஆய்வாளர் கணேஷ் லோண்டே கூறுகையில், பாதுகாப்புக் காவலரும் மற்ற நோயாளிகளுடன் தவறாக நடந்து கொண்டாரா என்று விசாரிக்கின்றோம் என தெரிவித்தார்.