#Shocking:பேத்திக்கு பாலியல் தொல்லை;முன்னாள் அமைச்சர் நெஞ்சில் சுட்டு தற்கொலை!
உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தனது பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தனது மருமகளால் குற்றம் சாட்டப்பட்டார்,இதனையடுத்து,ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே,தனது மாமியாருடன் நடந்து சென்றபோது தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும்,மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் அண்டை வீட்டாரான சவீதாவின் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தனது வீட்டின் மாடியில் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக,உத்தரகாண்ட் வட்ட அதிகாரி (CO) ஹல்த்வானி பூபிந்தர் சிங் தோனி கூறுகையில்:”தற்கொலை செய்து கொள்வதற்கு முன், பகுகுணா காவல்துறையை அழைத்தார்.உடனே,ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது, நீண்ட உரையாடலுக்குப் பிறகு, அவரை கீழே இறங்கும்படி சமாதானப்படுத்தியது.ஆனால் அவர் திடீரென்று துப்பாக்கியை எடுத்து மார்பில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவரை உயிர்ப்பிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.எனினும்,அவர் உயிரிழந்தார்”,என்று தெரிவித்துள்ளார்.
Ex-Uttarakhand Minister kills self after being booked for molesting granddaughter
Read @ANI Story | https://t.co/zWpcNocvfB#uttarakhandnews #RajendraBahuguna #pocso pic.twitter.com/rGl5L0xBfy
— ANI Digital (@ani_digital) May 27, 2022
இதனைத் தொடர்ந்து,முன்னாள் அமைச்சரின் தற்கொலையை தொடர்ந்து அவரது மருமகள் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.