#shocking: 18 மாதங்களாக இறந்தவரின் உடலை பாதுகாத்த குடும்பத்தினர்..
கோமாவில் இருப்பதாக நினைத்து 18 மாதங்களாக இறந்தவரின் சடலத்தை குடும்பத்தினர் பாதுகாத்து வீட்டில் வைத்துள்ளனர்.
கான்பூரில் வருமான வரித்துறை ஊழியர் ஒருவரின் குடும்பத்தினர், அவர் கோமா நிலையில் இருப்பதாகக் கருதி அவரது இறந்த உடலை கான்பூரில் உள்ள வீட்டில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் கோமாவிலிருந்து வெளியே வருவார் என்ற நம்பிக்கையில் அவரது மனைவி தினமும் அவர் மீது ‘கங்காஜல்’ தெளிப்பார் என்று கூறினர்.
ஆனால் வருமான வரித்துறை ஊழியர் இருதய சுவாச நோய்க் காரணமாக ஏப்ரல் 2021 இல் இறந்துள்ளார்.