மும்பை ஐஐடி வகுப்பறையில் புகுந்த பசுமாடு-மாணவர்கள் அதிர்ச்சி !
மும்பையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போது வகுப்பறையில் பசுமாடு வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது ஒரு புறத்தில் இருந்த கதவு வழியாக பசுமாடு வகுப்பறைக்குள் நுழைந்தது. அதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து மாட்டை வெளியேற்ற முயற்சித்தனர்.
Cow Complete its full training course in IIT Bombay for enter in Area 51 #IITBombay #IIT
pic.twitter.com/wJ5bnWpW6O— RV (@Dominus_rv18) July 29, 2019
சில மாணவர்கள் மாட்டை விரட்ட பசுமாடு வகுப்பறையில் சுற்றி சுற்றி வந்தது. பிறகு மற்றொரு கதவை அடைத்ததால் பசுமாடு வெளியே சென்றது.மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் பவாய் ஏரி அருகே உள்ளது.
கடந்த சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் அந்த மாடு மழைக்காக வந்திருக்கலாம் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் மழையிலிருந்து தப்பிக்க சிறுத்தை ஒன்று ஐஐடி வளாகத்தில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது