அசாம் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி;அடிப்பட்டவர் மீது கொடூரமாக ஏறி மிதிக்கும் புகைப்படக் கலைஞர்..!
அசாம் மாநிலத்தில் போலீசார் சுட்டதில் கீழே விழுந்த நபர் மீது புகைப்படக் கலைஞர் ஒருவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு,அம்மாநிலத்தில் உள்ள தர்ரங் மாவட்டத்தின் சிபஜார் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வேளாண் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி,கடந்த திங்கட்கிழமையன்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி தொடங்கிய நிலையில்,800 குடும்பங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த 1,487 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக நேற்று நூற்றுக்கணக்கான போலீசார் தோல்பூர் பகுதிக்கு சென்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,போலீசாருக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து,முதலில் போலீசார் தடியடியையும்,பின்னர் துப்பாக்கி சூடும் நடத்தினர்.
அதுமட்டுமல்லாமல்,துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்த ஒருவரை போலீசார் கண்மூடித்தனமாக தாக்கினார்கள்.இந்த தாக்குதலில் பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர் .மறுபுறம்,காவலர்கள் தரப்பில் 9 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,போலீசாரைத் தொடர்ந்து,கீழே விழுந்த அந்நபர் மீது அரசு புகைப்படக் கலைஞர் பிஜோய் போனியா என்பவர் கொடூரமாக ஏறி மிதிக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.இதனால்,ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.எனினும்,ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் பணி பின்னர் தொடரும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும்,காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும்,இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“மாநில அரசே வன்முறையை தூண்டிவிட்டுள்ளது.அசாம் மாநில சகோதர, சகோதரிகளுக்கு உறுதுணையாக இருப்பேன்,எந்த ஒரு குழந்தைக்கும் இதுபோன்ற சூழல் ஏற்படக் கூடாது என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
Assam is on state-sponsored fire.
I stand in solidarity with our brothers and sisters in the state- no children of India deserve this. pic.twitter.com/syo4BTIXKH
— Rahul Gandhi (@RahulGandhi) September 23, 2021
தற்போது,இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு,பிஜோய் போனியா கைது செய்யப்பட்டுள்ளார்.