மத்திய பிரதேச மாநிலம் பாலகாட்டில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் உள்ள பக்குடோலா வனப் பகுதியில் பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பயிற்சி பெண் விமானி மற்றும் விமானத்தின் பயிற்றுவிப்பாளர் உயிரிழந்தனர்.
தேசிய பறக்கும் பயிற்சி நிறுவனத்தால் இயக்கப்படும் டைமண்ட் டிஏ-40 என்ற விமானம், மகாராஷ்டிராவின் கோண்டியாவில் உள்ள பிர்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, 40 கிமீ தொலைவில் உள்ள பாலகாட்டில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விபத்தான இந்த விமானம் IGRAU (இந்திரா காந்தி ராஷ்ட்ரிய ஊரான் அகாடமி)-க்கு சொந்தமானது, எனவும், அது ஒரு பயிற்சிப் பயணத்தில் இருந்தது எனவும், இந்த விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என்று அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள கோண்டியாவைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்னதாக அருணாச்சலப் பிரதேசத்தில் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…