மத்திய பிரதேசத்தில் தந்தை மொபைல் ஃபோன் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யாததால், மகன் தூக்கிட்டு தற்கொலை.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் மொபைல் போனுக்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில் இளம் குழந்தைகள் முதல் இளம் வாலிபர்கள் வரை பலர் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவன் தனது தந்தை மொபைல் போனுக்கு டேட்டா பேக் ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திங்கட்கிழமை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிறுவன் மொபைல் போனுக்கு அடிமையாகி இருந்ததும், டேட்டா பேக் காலாவதி ஆன பிறகு தந்தை ரீசார்ஜ் செய்யாமல் இருந்ததும் தான் அவரது மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கூலித் தொழிலாளியாக பணிபுரியும் அந்த சிறுவனின் தந்தை தனது குடும்பத்தை நடத்துவதுவதற்கே நிதி பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில் மொபைல் போனுக்கு டேட்டா பேக் ரீசார்ஜ் செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : திருமணம், கலாச்சாரம், பண்பாடு என தொன்மை வாய்ந்த இந்திய சமூகம் தற்போது வேகமாக நகர்ந்து வரும் நவீன…
மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க,…
டெல்லி : ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக ஸ்ரீதர் வேம்பு அறிவித்தார். முழு…
சென்னை : தனது அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்புகள் தனது பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகுமென எக்ஸ்…
டெல்லி : 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, கடந்த ஜனவரி 25ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன்…
டோராடூன் : பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்பது பாஜகவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.…