அதிர்ச்சி…திடீரென வெடித்த திருமண பரிசு..! 2 பேர் பலி, 4 பேர் காயம்..!

Default Image

சத்தீஸ்கரில் திருமண பரிசாக பெற்ற மியூசிக் சிஸ்டம் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் திருமண பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் திடீரென வெடித்துள்ளது. இந்த விபத்தில் புதிதாக திருமணமான ஒருவரும் அவரது மூத்த சகோதரரும் உயிரிழந்துள்ளனர். கபீர்தாம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி, 22 வயதான ஹேமேந்திரா மெராவி என்பவர் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து, அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அவரது வீட்டில் ஒரு அறைக்குள் திருமணப் பரிசுகளை அவிழ்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது பரிசில் இருந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்திற்கு மெராவி மின் இணைப்பு கொடுத்துள்ளார். மின் இணைப்பு கொடுத்ததும் திடீரென அந்த மியூசிக் சிஸ்டம் வெடித்துள்ளது. இந்த விபத்தில் மெராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அவரது சகோதரர் ராஜ்குமார் மற்றும் ஒன்றரை வயது சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தடயவியல் நிபுணர்களுடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில், மெராவியின் சகோதரர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும், அறையை ஆய்வு செய்தபோது வெடி விபத்துக்கான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை என்றும் மியூசிக் சிஸ்டம் மட்டுமே வெடித்ததுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்