உ.பியில் அதிர்ச்சி…கண்முன்னே தீக்குளித்த சகோதரி…! காப்பாற்றாமல் வீடியோ எடுத்த சகோதரன்.!

Sister set on fire

உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 31 வயது பெண் ஒருவர், அக்கம்பக்கத்தினருடன் ஏற்பட்ட தகராறில் தனது பெற்றோரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால், பெண்ணின் சகோதரர் தீக்குளிக்க வற்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ரெட்டி காலனியில் சுந்தர்லால், ஊர்மிளா தம்பதிகள் மகள் சரோஜ் உட்பட மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுந்தர்லால் நகரில் பகுதி நேர வேலை செய்கிறார். இவர்கள் வீட்டிற்கு அருகில் பவன் குப்தா என்பவர் வசித்து வருகிறார்.

நேற்று ஊர்மிளா, பவன் குப்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, குப்தா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பின், அங்கு வந்த போலீசார் ஊர்மிளா மற்றும் அவரது கணவர் சுந்தர்லால் இருவரையும் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, ஊர்மிளாவின் மகள் சரோஜ் பெட்ரோல் ஊற்றி தன்னைத்தானே தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவருக்கு அருகில் இருந்த சரோஜின் சகோதரர் சஞ்சீவ், காப்பாற்றுவதற்குப் பதிலாக வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஊர்மிளா, தனது மகள் மனஉளைச்சலால் தற்கொலை செய்ய முயன்றுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், அருகில் உள்ளவர்கள் சரோஜ் தனது சகோதரரின் வற்புறுத்தலால் இதனை செய்துள்ளதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து, ஷாஜஹான்பூர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஆனந்த் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் இடுப்பு வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்