அதிர்ச்சி : ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு..! ஜனவரி-1 முதல் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணம்..!
வரும் ஜனவரி-1 முதல் அதிகரிக்கும் ஏ.டி.எம் கட்டணம்.
இன்று அதிகமானோர் வங்கிக்கு சென்று பணம் எடுப்பதை விடுத்து, ஏடிஎம் மூலமாக தான் பணம் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்து, ஒரு மாதத்திற்கு 5 முறை ஏடிஎம்-ல் கட்டணம் இல்லாமல் பணத்தை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்.
அதன்படி, வரைமுறையை தாண்டி வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் தற்போது 20 ரூபாயும், மற்ற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ஜி.எஸ்.டி-யுடன் 23.6 ரூபாயும் கட்டணமாக பெறப்படுகிறது. இந்த கட்டமானது வரும், ஜனவரி 1-ஆம் தேதி முதல் அதிகரிக்கபடுவதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால் ஒரு ஒவ்வொரு பரிவர்த்தனைக்குமான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, ரூ.21 ரூபாயாகவும், தங்களது வங்கி கணக்கை தவிர்த்து, மற்ற வங்கிகளின் ஏடிஎம்-ஐ பயன்படுத்தி பணம் எடுத்தால், ஜி.எஸ்.டி-யுடன் சேர்த்து ரூ.25 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.