உ.பி-யில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை காலை நக்க வைத்த உயர் ஜாதி இளைஞன்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடிக்கடி தலித் மக்களுக்கு மத்தியில் பல்வேறு கொடுமைகள் நேரிட்டு வருகிறது. அந்த வகையில் ரேபரேலியில் ஜாதி அடிப்படையிலான வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனை, உயர் ஜாதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது கால்களை நக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தரையில் அமர்ந்து, பைக்கில் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞனின் காலை நக்குகிறார். சுற்றி உள்ள பலர் பாதிக்கப்பட்ட சிறுவன் பயந்து நடுங்குவதை கண்டு ஏளனமாக சிரிக்கின்றனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் உயர் சாதியினர் என்று கூறப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுவன் 10-ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், தகப்பன் இல்லாத சூழலில் விதவை தாயுடன் வசித்து வருகிறார். அந்த சிறுவனின் தாய் குற்றம்சாட்டப்பட்ட சிலரின் வயலில் வேலை செய்வதாக கூறப்டுகிறது.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…