ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி 2 மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், உதய்பூரைச் சேர்ந்த 18 வயது நீட் தேர்வு பயிற்சி மாணவர் நேற்று காலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக அப்பகுதி காவல்துறை கூறுகையில், மெகுல் வைஷ்ணவ் என்ற மாணவர், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) தயாராகி வந்தார். மெகுல் வைஷ்ணவ் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சலும்பரில் வசிப்பவர். கடந்த 2 மாதங்களாக கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் விஞ்ஞான நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்து வந்தார்.
இந்த சம்பவத்தின் போது, மெகுல் வைஷ்ணவ் தனது விடுதி அறையில் தனியாக இருந்துள்ளார். நீண்ட நேரம் கடந்தும் மெகுல் தனது அறையை விட்டு வெளியே வராததால், ஆதரிச்சியடைந்த அவரது விடுதி நண்பர்கள், விடுதி பாதுகாப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் விடுதி பராமரிப்பாளர் அறையின் கதவை உடைத்து உள்ளே பார்த்ததில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. பின்னர் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் என்றும் சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் கடிதம் எதுவும் மீட்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுபோன்று, அதே நாளில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மற்றொரு பயிற்சி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு கோட்டாவுக்கு வந்த அந்த மாணவர் ஆதித்யா என அடையாளம் காணப்பட்டார் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் கோட்டாவில் மொத்தம் 9 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர், மே மாதத்தில் இதுபோன்ற 5 வழக்குகளும், ஜூன் மாதத்தில் 4 வழக்குகளும் பதிவாகியுள்ளன என கூறப்படுகிறது.
இதற்கிடையில், உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தற்கொலைக்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்து கவலை தெரிவித்தனர். மாணவர்கள் படிப்பில் அழுத்தத்தை எதிர்கொண்டார்களா என்பது குறித்து கல்லூரி/நிறுவன அதிகாரிகளிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்கொலை தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது டெஸ்ட்…