மூன்று மாதத்தில் சந்திரயான்-2 ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி…!!
இஸ்ரோவின் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் இன்று தெரிவித்ததாவது , மத்திய அரசானது இஸ்ரோ பணிகளை மேம்படுத்த மத்திய அரசு 30 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.இந்த ஒதுக்கீட்டு தொகையை வைத்து 23 திட்டங்களைச் செயல்படுத்த்தலாம். இரண்டாவது முறையாக சந்திரயான்-2 என்ற செயற்கைக்கோளை 3 மாதத்தில் விண்ணில் ஏவ தயாராக இருப்பதாகவும் , உலகிலேயே மிக குறைந்த அளவு பணத்தை செலவு செய்து தயாரிக்கப்பட்ட ஏவுகணையை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில் செயற்கைக்கோளில் மனிதனையும் வைத்து விண்ணுக்கு அனுப்ப உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.